எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.
இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த விமானத்தில் பயணித்த 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கனேடிய பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள கனேடிய பிரதமர், “விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகவும் துக்கமடைந்தேன்.
கனேடியர்கள் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் அன்பிற்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்“ என குறிப்பிட்டுள்ளார்.