LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, March 6, 2019

வரவு செலவு திட்டத்தின் முழு விபரம்

தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு-செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது.
நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆற்றிய உரையில் மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
  • விசேட தேவையுடையவர்களுக்கு 3000 வழங்கப்படுகிறது. அதனை 5000-மாக அதிகரித்து, குறைந்த வருமானம் பெரும் 72 ஆயிரம் பேருக்கு வழங்க 4300 மில்லியன் ஒதுக்கப்படடுள்ளது.
  • சூதாட்ட விடுதிகளுக்கான அனுமதி கட்டணம் 400 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு – சூதாட்ட விடுதிக்கான நுழைவு கட்டணம் 50 அமெரிக்க டொலரினால் அதிகரிப்பு.
  • கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிப்பு. ஒருநாள் சேவை 5 ஆயிரம் ரூபாயாகவும், வழமையான சேவை 3500 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
  • சிகரெட்டின் விலை ஜுன் முதலாம் திகதி முதல் 5 ரூபாயினால் அதிகரிப்பு
  • போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பனை அபிவிருத்தி நடவடிக்கைக்கு 5 மில்லியன் ஒதுக்கீடு.
  • மடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு
  • கம்பெரலிய திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்ய 1 மில்லியன் ரூபாய்
  • இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்வது கட்டாயம்
  • இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது – மேலும் கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.
  • சமுர்த்தி திட்டம் மறுசீரமைக்கப்படும் அதற்காக 6 இலட்சம் புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கென 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • குடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இராணுவ கொடுப்பனவு அதிகரிக்கப்படும் அதில் கட்டளை தளபதிகளுக்கு கொடுப்பனவு 5000 ரூபாய் வழங்கப்படும் – வாடகைக் கட்டணம் 100% அதிகரிக்கப்படும். சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.
  • அரச ஊழியர்களுக்கான சம்பளம் ஜுன் முதல் 2500 ரூபாயினால் அதிகரிப்பு.
  • அதிக வசதிகளையுடைய ரயில் சேவைக்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. அதில் மாலபே – கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரி செய்ய 12 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
  • அரச ஊழியர்களின்  சம்பள உயர்விற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு. ஜுலை முதலாம் திகதி முதல் மேலும் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு
  • மேல் மாகாணம் மத்திய மாகாணங்களில் பேருந்து சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் GPS சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
  • பொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பேருந்து சேவை அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
  • அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • போகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • பல்கலைக்கழக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன்
  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும்
  • சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களுக்காக 24,750 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு
  • இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு.
  • கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் – விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை
  • கல்வித் துறைக்கு 32 ஆயிரம் மில்லியன் ரூபாய் – தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • சுற்றுலாதுறையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.
  • சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளது அதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல் முறையாக வீடு கொள்வனவு செய்யவுள்ள நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான சலுகை கடன்கள் வழங்கப்படும். 25 ஆண்டுகளில் மீளச் செலுத்தும் வகையில் 6 வீத வட்டிக்கு சலுகை கடன் வழங்கப்படவுள்ளது.
  • வடக்கில் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
  • தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.
  • 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் திருமண தம்பதிகளுக்கு வழங்க நடவடிக்கை.
  • சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க – 1,480 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை 5 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து, குறைந்த வருமானம் பெரும் 72 ஆயிரம் பேருக்கு வழங்க 4 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படடுள்ளது.
  • 3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும்.
  • பல்கலைக்கழக மாணவர்களின் 50% – 30%மாணவர்களே தொழிலாளர்கள்.. வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பருத்தித்துறை மற்றும் பேசாலையில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதான பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் புதிய கழிவறைகள் நிர்மாணிக்கப்படும்.
  • பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
  • கறுவா ஏற்றுமதியின் போது தகுதிச்சான்றிதழ் பெறல் கட்டாயம். அதன் சர்வதேச அங்கீகாரத்தை உறுதி செய்ய விசேட நிதி ஒதுக்கீடு.
  • சிறிய டிரக் வாகனம் மீதான உற்பத்தி வரி நீக்கம்.
  • இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தை விரிவுபடுத்த  500 மில்லயின் நிதி ஒதுக்கீடு.
  • இறப்பர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு 800 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
  • கடந்த காலங்களில் விவசாயத்தில் பெறப்பட்ட பாரிய இழப்பை ஈடுசெய்ய விசேட களஞ்சியப்படுத்தல் இடங்களுக்கு நிதி ஒதுக்கீடு.. அதனை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும்
  • சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
  • பல ஏற்றுமதி வரிகள் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.
  • என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்கவும் நடவடிக்கை. அத்தோடு 1925 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெறலாம்.
வரவு-செலவு திட்ட அறிக்கையுடன் நிதியமைச்சர் நாடாளுமன்றை வந்தடைந்தார்
வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு-செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், நிதியமைச்சர் வரவு செலவு திட்ட அறிக்கையுடன் நாடாளுமன்றத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வறுமை ஒழிப்பை முக்கிய இலக்காக கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பை தொடர்ந்து நிதியமைச்சரின் விசேட உரையும் இடம்பெறவுள்ளது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7