இன்று (சனிக்கிழமை) சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் விமானத்தில் பயணம் மேற்கொண்ட சிலர், விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தை பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஆதரவாளர்களே நடத்தியுள்ளனர்.
மேலும் மதுரை விமான நிலையத்திற்கு, முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன் கோஷமும் எழுப்பியுள்ளனர். ஆகையால் விமானத்திலும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தை குறித்த விமானம் வந்தடைந்தவுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டவர்களை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மதுரை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.