விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய விவசாயக்கொள்கைத் திட்டத்தின் மூலம் உள்ளூர் விவசாய நடவடிக்கைகளை பலப்படுத்த முடியும் என்பதோடு, உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் அறுவடைக் காலங்களில் உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.