ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கான அல்ஜீரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கலகப் பொலிஸாரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அல்ஜீரியாவில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் அரிதாகவே நடத்தப்படுகின்றன. 81 வயதான அல்ஜீரிய ஜனாதிபதி அப்துலசீஸ் 5 வது முறையாக மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அல்ஜீரிய ஜனாதிபதி அப்துலசீஸ் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு நாட்டை கொண்டு நடத்த இயலாத நிலையில் இருப்பவர் என அல்ஜீரிய மக்கள் தெரிவிக்கின்றனர்.