இதன் மூலமே துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயற்பாடுகளை துரிதப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கு ஒத்துழைப்பு தொடர்பாக தொழில் பங்குதாரர்களை அறிவுறுத்தும் நிகழ்வு கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த சில ஆண்டுகளாக துறைமுகங்கள் துறையில் தீர்மானங்களை மேற்கொள்வதில் தாமதம் நிலவி வருகிறது. எதிர்வரும் காலங்களில் இதனை தவிர்ப்பதற்கு அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
கொழும்பு துறைமுகமானது தற்பொழுது முழுமையான வளர்ச்சியை அடைந்துள்ளது. இவ்வளர்ச்சியானது கால மாற்றத்திற்கேற்ப இடம்பெற்றுள்ளது. இத்துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முடிவுகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே நாம் இன்று எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினையாகும்.
ஆனால், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை எதிர்கொள்ளும் மிக துள்ளியமான பிரச்சினையாக இதனை கருத இயலாது. நான் மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சராக செயற்பட்ட காலத்திலும் இவ்வாறான பிரச்சினைகளிற்கு முகங்கொடுக்க நேர்ந்தது” எனத் தெரிவித்தார்.