தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த செல்லும் விமானத்தில் இருந்த கல்லூரி மாணவர் வைத்திருந்த பெட்டியிலேயே இந்த அரிய வகை உயிரினங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது அதில் ஹார்ன்ட் பிட் வைபர் எனும் கொடிய விஷமுள்ள பாம்பு, உடும்பு, எகிப்திய ஆமைகள், விஷ அரணை, எறும்புத்திண்ணி ஆகியவை இருந்துள்ளன. அதேநேரம் இவை 34 வகையான கொடிய உயிரினங்கள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்கள் தாய்லாந்து செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த விசாரணையின் போது அவர் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் என தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.