
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறினால் தமது உற்பத்தி நடவடிக்கைகளை இங்கிலாந்தை விட்டு வெளியேற்றும் நிலை ஏற்படக்கூடுமென பிஎம்டபிள்யு (BMW) நிறுவனம் எச்சரித்துள்ளது.
அத்துடன் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் தமது மினி (MINI) மொடல் கார் தயாரிப்புக்களையும் முற்றுமுழுதாக நிறுத்தும் நிலையும் ஏற்படுமெனவும் ஜேர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு (BMW) அறிவித்துள்ளது.
அதேபோல் உடன்பாடற்ற பிரெக்ஸிற் தமது இங்கிலாந்து தொழிற்சாலையின் எதிர்காலத்தை பாதிப்புக்குள்ளாக்குமென டொயோட்டா நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்து ஏற்கனவே போர்ட் (Ford), நிஸான் (Nissan) மற்றும் அஷ்டன் மார்ட்டின் (Ashton Martin) ஆ
