அவ்வகையில், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் போட்டியிடவுள்ள 39 வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ.க. தலைவர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.
மேனகா காந்தி சுல்தான்பூரிலும், வருண் காந்தி பிலிபித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்காளத்தின் அல்பேரியா தொகுதியில் நடிகர் ஜாய் பானர்ஜி போட்டியிடுகிறார்” எனத் தெரிவித்தார்.
பிரபல நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2004ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு உறுப்பினர் ஆனார்.
இதையடுத்து ஜெயப்பிரதா சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் சேர்ந்தார். இதற்கிடையே, இன்று காலை ஜெயப்பிரதா திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.