‘நச்சுத்தன்மையற்ற உணவுகளை உண்போம் தாய்நாட்டை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 03 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
நச்சுத்தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சியின் நோக்கம் நச்சுத்தன்மையற்ற நாட்டையும் பேண்தகு அபிவிருத்தி யுகத்தையும் ஏற்படுத்துவதாகும்.
விவசாய உபகரணங்கள், உற்பத்திகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கண்காட்சி கூடங்கள், மருத்துவ சிகிச்சை முகாம்கள், புத்தகக் கண்காட்சி, விசேட துறைசார் உரைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
கண்காட்சியை திறந்த வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.
ஆரோக்கியமான சமூகம் – நச்சுத்தன்மையற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழி பிரகடனமும் இதன்போது இடம்பெற்றது.