நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.
புணே நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார் கூறியதாவது, “இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றிருக்கிறேன். தற்போது என்னை தலைவராக உறுதிப்படுத்த 15-வது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.
அத்துடன் என் குடும்பத்தை சேர்ந்த இருவர் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் நான் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.