அத்துடன், 2015ஆம் ஆண்டு, இலங்கையால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் செய்வது குறித்தும் சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அமர்வில் வாய்மொழி மூலமான கேள்விக்கு பதில் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான உறவு சுமூகமாக நகர்கின்றது. இன்று உள்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பு குறித்து கதைப்பவர்கள்தான் அன்று பிரதம நீதியரசரை 24 மணி நேரத்துக்குள் பலவந்தமாக வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இராணுவத்தினருக்காக தற்பொழுது அதிக கரிசனைக் காட்டுபவர்கள் அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகாவை இழுத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.
சர்வதேச நீதிபதிகளை ஏற்பதற்கு நாம் உடன்படவில்லை. மாறாக உள்ளக விசாரணைக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை பெறுவதற்கு மாத்திரமே உடன்பட்டோம்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இலங்கைக்கு சாதகமாக்கிக்கொள்ள அதில் திருத்தங்களை செய்வது குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சு நடத்தப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.