அந்தவகையில், கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலைவரப்படி வெறும் 47 லட்சம் பாகிஸ்தானிய ரூபாயாக காணப்பட்டதாக டான் (Dawn) என்கிற பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு 3.56 கோடி பாகிஸ்தானிய ரூபாயாக இருந்த இம்ரான் கானின் சொத்து மதிப்பு அதற்கு அடுத்த ஆண்டு வெறும் 1.29 கோடி பாகிஸ்தானிய ரூபாயாக குறைந்தது. அதன் பின் கடந்த 2017ஆம் ஆண்டு மேலும் சரிந்து வெறும் 47 லட்சம் பாகிஸ்தானிய ரூபாயாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 2015ஆம் ஆண்டில் இம்ரான் கான் தனக்கு சொந்தமான வீடுகளை விற்றதில் கிடைத்த பணம் மற்றும் வெளிநாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற பணத்தாலும் 3.56 கோடி பாகிஸ்தானிய ரூபாயாக சொத்து மதிப்பு காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் போதுமான வருமானம் இல்லாததால் மொத்த சொத்துக்கள் சரிந்து விட்டதாகவும், அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.