ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆளும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர்.
ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மாவை நாங்கள் இழந்து தவித்து வரும் நிலையில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு ‘டாடி’யாக இருந்து வழிகாட்டுகிறார்.
மேலும், இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரவேண்டும்” எனக்கூறினார்.