அண்மையில் காஷ்மீர், புல்வாமாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதன்போது குறித்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.
மேலும் அவ்வியக்கத்தின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க வேண்டுமென தீர்மானம் கொண்டுவந்தது.
ஆனால், இவ்விடயத்தில் ஆராய்ந்து, தீர்ப்பு வழங்குவதற்கு காலஅவகாசம் தேவையென சீனா முட்டுக்கட்டை போட்டது.
இந்நிலையில், மசூத் அசாரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான பணிகளில் தொடர்ந்து இந்தியா ஈடுபடுமென அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.