தமது ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கட்டும் என்று விஜய் கூறியதாலேயே சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மிக பிரம்மாண்டமான முறையில் ஒரு கால்பந்து அரங்கம் போன்ற செட் அமைக்கப்பட்டு வருகிறது.
இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நெருங்கும்போது படத்திற்கு பெயர் சூட்டப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.