கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அல்லது இரவு பனிப்புயலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் -19 முதல் -30 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
