கோவை, நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த தமிழீழம், மற்றும் அவரது சகோதரி ஆகியோரே துப்பாக்கி உரிமத்தை கோரியுள்ளனர்.
இவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, குறித்த கடிதத்தை இன்று (சனிக்கிழமை) கையளித்துள்ளார்.
அக்கடிதத்தில், இருவருக்கும் பாதுகாப்பு கருதி துப்பாக்கி உரிமத்தை வழக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும் பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக இவர்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.
எனவே பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை தற்காத்துக்கொள்ள துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இது ஒரு பிரபல்யத்திற்காக செய்த செயலென பொள்ளாச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் துப்பாக்கி உரிமம் கோரும் ஒரு பெண்ணுக்கு 18 வயது எனவும் மற்றையவருக்கு 15 வயது எனவும் அவர் கூறியுள்ளார்.