ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிற நிலையில் சுவிஸர்லாந்தில் இன்று (திங்கட்கிழமை) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட மகஜரிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்திருந்தாலும் அந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.
இப்போதும் பல்வேறு விதமான அசௌகரியங்களை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். காணாமல் போனோருடைய உறவுகள் போராட்டம், அரசியல் கைதிகள் விவகாரம், நில மீட்புக்கான போராட்டம் என மக்கள் தொடர்ந்தும் நிறைவேறாத பிரச்சினைகளுடனேயே வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.
எனவே அவர்களின் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில், ஐ.நா. மனித உரிமை பேரவை விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என வலியறுத்தப்பட்டுள்ளது.
