பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சுமார் 150 மீட்டர் தூரம் ஊடுருவிய நிலையிலேயே அதனை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆளில்லா உளவு விமானம் ஜம்மு-காஷ்மீரின் ராக்சிக்ரி செக்டார் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் பதற்ற சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த சூழல் தற்போது தணிந்துள்ளது.
இதனிடையே எல்லைதாண்டிய பாகிஸ்தானின் 3 ஆளில்லா உளவு விமானங்ளை கடந்த வாரங்களில் இந்தியா சூட்டு வீழ்த்தியிருந்தது. தற்போது இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.