பிரதேச மக்களினால் இன்று (வெள்ளிக்கிழமை) இராணுவ முகாமிற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முறக்கொட்டான் சேணை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான க.கமலேஸ்வரன், கு.குணசேகரம், சு.சுதர்ஷன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இராணுவ முகாமிற்கு முன்பாக ஒன்றுகூடிய பொதுமக்கள் ‘எமது காணி எமக்கு வேண்டும்’, ‘இராணுவமே வெளியேறு’, ‘பாடசாலைகை் காணியை உடன் விடுவி’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தின் முடிவின்போது ஜனாதிபதிக்கும் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிபருக்கும் கோரிக்கை அடங்கிய மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனிடம் பொதுமக்களின் பிரதிநிதிகள் கையளித்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி ஜானதிபதியை சந்தித்து இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.