தவக்காலம் இன்றைய தினம்(புதன்கிழமை) திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள தவகாலத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள தவக்காலச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
படைப்பின் மீட்பு, பாவத்தின் அழிக்கும் சக்தி, மனம் வருந்துதல் மற்றும் மன்னிப்பின் குணமளிக்கும் வல்லமை ஆகிய மூன்று தலைப்புகளில் தவக்காலச் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தயாராகும் தவக்கால மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும்வேளை இந்த மனமாற்றம் படைப்புக்கும் நன்மையைக் கொண்டுவரும் எனக் கூறியுள்ளார்.
பாவத்திற்காக மனம் வருந்துதல், மனமாற்றம், மன்னிப்பு ஆகியவை வழியாக கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் புதுப்பிப்பதற்கு தவக்காலம் வலியுறுத்துகின்றது எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
இதன் வழியாக பாஸ்கா பேருண்மையின் அளவற்ற அருளை முழுமையாகப் பெறமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். பக்தி முயற்சிகள் மற்றும் நற்செயல்கள் வழியாக தவக்காலத்தில் பாரம்பரியமாக மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.
இந்த அருளின் காலம் வீணாய் போகாமல் உண்மையான மனமாற்றத்தின் பாதையில் நாம் செல்வதற்கு கடவுளின் உதவியை நாடுவோம் எனவும், தன்னலத்தைக் கைவிட்டு தேவையில் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு நம் ஆன்மீக மற்றும் பொருள் உதவிகளை வழங்குவோம் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
நோன்பு, செபம், தர்மம் செய்தல் ஆகியவை, வரலாற்றையும் அனைத்துப் படைப்புக்களையும் உட்படுத்தும் புரட்சியின் அடையாளங்கள் என்றும், நோன்பு என்பது நமது பெருவிருப்பங்களைத் திருப்திப்படுத்தும். எல்லாச் சோதனையிலிருந்தும் விலகுவதாகும் என்றும் தன்னலத்தை கைவிட செபம் நமக்குக் கற்றுத் தருகின்றது என்றும் தனக்கென அனைத்தையும் வைத்திருக்கும் அறிவற்றதன்மையிலிருந்து தப்பிப்பதற்கு தர்மம் செய்தல் உதவுகின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.