22 வயதான இளைஞன் ஒருவர் நேற்று(சனிக்கிழமை) ஆயுத முனையில் கடத்தப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடத்தப்பட்ட இளைஞனை பாதுகாப்பாக மீட்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞனின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், இளைஞன் குறித்து அறிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறும் கோரியுள்ளனர்.
மேலும், கடத்தப்பட்டுள்ள இளைஞனை கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.