இதனால் நேற்று (திங்கட்கிழமை) பல பிராந்தியங்களுக்கு மின் தடங்கல் ஏற்பட்ட போதிலும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்துள்ளனர்.
மின்தடங்கல் காரணமாக போக்குவரத்து சமிக்ஞைகள் இயங்காமையால் தலைநகர் கரகஸில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுரங்கப்பாதை அமைப்பும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இம்மாத ஆரம்பத்தில் மின் தடை காரணமாக வெனிசுவேலா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. மின்நிலைய செயலிழப்பு முழு நாட்டையும் சுமார் ஐந்து நாட்களுக்கு இருளில் மூழ்கடித்தது.
இந்நிலையானது அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வலதுசாரி தீவிரவாதிகளின் நாசக்கார செயல் என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெனிசுவேலாவில் 60 வீதமான மின்சாரம் நீர்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.