மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் நிறைவடைந்து, மின் கட்டமைப்பிலிருந்து அகற்றப்பட்ட மாத்தறை மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகளிலுள்ள இரண்டு மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்கீழ், 75 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.