ஜம்மு – காஷ்மீர் புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென உலகநாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையிலேயே அமெரிக்காவிற்கு வீசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தை பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது.
இதன்படி அமெரிக்காவிற்குப் பயணம்செய்யும் பாகிஸ்தானியர்களின் வீசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வீசா கால அளவை தற்பொழுது 3 மாதமாக மட்டுப்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பயங்கரவாதத்தை ஒழிக்கும் எத்தகைய செயற்பாடுகளுக்கும் இந்தியாவுடன், அமெரிக்கா துணை நிற்குமென அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.