பஞ்ச வைஷ்ணவ தேஜ் சகோதரர் சாய் தரம்தேஜ், விஜய்சேதுபதியின் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஒரே நேரத்தில் அண்ணன் தம்பிகள் நடிக்கும் படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் விஜய்சேதுபதி நடித்து வருகின்றார்.
இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகவுள்ள, இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பேத்ராஜ் நடிக்கவுள்ளார்.
மேலும், இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.