(பாண்டி)
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 ஏக்கர் தவணைக் கண்ட வயல் வெளிப் பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக பிரதேசத்தின் விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த 5 நாட்க்களாக இவ் யானையின் உடலம் காணப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகை தந்து அதனை பார்வையிட்;டு செல்கின்றனரே தவீர அதனை குறித்த பிரதேசத்தில் இருந்து அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கின்றனர்.
பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதனால் தங்களால் உணவு உட்கொள்ளவோ மற்றும் தங்களது அற்றாட இயல்பு நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்
குறித்த பிரதேசத்தில் இருந்து யானையின் உடலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கேட்கின்றனர்.