முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்திட தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி யோகேஸ் கண்ணா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்ததுடன், வேட்பு மனுவில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். கையெழுத்திட தடைவிதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும். அந்தவகையில் வேட்பு மனு ஏ மற்றும் பி படிவங்களில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடைவிதிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.