மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைய காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட
இறப்பு தொடர்பாக கால் நடை உற்பத்தி சுகாதார நடவடிக்கை தொடர்பில் பண்ணையாளர்களுக்கு தெளிவு படுத்தும்
கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட
செயலகத்தில் நடைபெற்றது
இந்த கலந்துரையாடலில் கால்நடைகளை பாதுகாப்பதில் காலநடை உற்பத்தி
சுகாதார திணைக்களம் எதிர் நோக்குகின்ற சவால்கள்
கால்நடைகளை பாதுகாப்பதில் பண்ணையாளர்களின் அசமந்த போக்கு
கிரமமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்காமை
விலங்குகளை அடையாளப்படுத்துவதற்கு முன் வராமை
பதிவு செய்யப்பட கால்நடைகளை விட பன்மடங்கு அதிகமான கால்நடைகளை
கால்நடைகளை அரச உதவிகள் பெறும்பொருட்டு பதிவு செய்யாது மறைத்து வைத்தல்
கால்நடைகளுக்கு காதடையாளமிடல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் என்பவற்றை இலகு
படுத்துவதுவதற்கும் விரைவு படுத்துவதற்கு
ஏற்றவலையில் பண்ணையாளர்கள் ஒத்துழைப்பு வழங்காமை
விழிப்பூட்டல் கருத்தரங்குகளில் பங்குபற்றாமை
பண்ணைகளை வைத்திய குழுவினரினால் சென்றடைவதற்கான பதாகைகள் இல்லாமை
முறையான கழிவகற்றல் போன்ற விடங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்
இதனால் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது
இடம்பெற்ற மாவட்ட கால்நடை பண்ணையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில்
மாவட்ட விவசாய பணிப்பாளர் வை பி . இக்பால் , காலநடை திணைக்கள மாவட்ட பிரதி
பணிப்பாளர் வைத்தியர் திருமதி உ .குலேந்திரன் , கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள
விலங்கு புலனாய்வு துறை அதிகாரி வைத்தியர் டி மயூரதி ,கால்நடை திணைக்கள, மாகாண
பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம் எ எம் . சுல்பிகார் அபூபக்கர் , பிரதேச
செயலாளர்கள் , மாவட்ட கால் நடை திணைக்கள அதிகாரிகள் ,வைத்தியர்கள் மற்றும் கால்
நடை பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்