இந்த தேர்தல் அறிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியாகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க. தலைமை நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக இன்று தி.மு.க. அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.