LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 18, 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மட்டக்களப்பு விஜயத்தை உண்மையான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால் புறக்கணிக்கவேண்டும்- தமிழ் உணர்வாளர் அமைப்பு


(பாண்டி)               
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மட்டக்களப்பு விஜயத்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவன் கணபத்திப்பிள்ளை மேகன் தெரிவித்தார்.

                இன்று (18) திங்கட்கிழமை செங்கலடியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் தொடர்;ந்தும்  உரையாற்றுகையில் இன்று காலை அமைச்சர் கயந்தகாருணா திலக்க அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பிதழ் கிடைத்திருந்தது எதிர்வருகின்ற 23ம் திகதி மட்டக்களப்பிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் காணிஉறுதிப்பத்திரம் விழங்கும் நிகழ்வு தொடர்பான   அழைப்பிதழ் கிடைக்கபெற்றது.

                அவ் அழைப்பிதழைப் பார்த்ததும் ஆச்சரியமாகவும் , வேதனையாகவும் கோபமாகவும் இருந்தது அவ் அழைப்பிதழில் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா, பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானா ஆகியோரது பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப்பார்க்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களே இல்லை என விளங்கிக்கொள்வார்கள்.

                மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்னள் மூன்று பேர் உள்ளர் இவர்களது பெயர் எங்கும் குறிப்பிடப்படவும் இல்லை இவர்களை கணக்கிலும் எடுக்கவில்லை இதனைப் பார்க்கும் போது இந்த அரசாங்கம் நன்றி கெட்டஅரசாங்கம் என்றுதான் கூறுவேன். இன்று ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் இருப்பதக்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் இப்படிப்பட்டவர்களை அவர்கள் கரிசணையில் எடுத்துக்கொள்ளவில்லை இது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் அல்ல இவர்களை வாக்களித்து அனுப்பிய தமிழ் மக்களுக்கும்தான்.

                எதிர் வரும் 23ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமச்pங்க அவர்கள் கலந்துகொள்ளும் இந் நிகழ்வை உண்மையான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றால் புறக்கணிக்க வேண்டும் காரணம் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கோடு இது உள்ளது. ஆககே இதை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் உணர்வாளர் அமைப்பு கேட்டுக்கொள்கிறது எனவும் தெரிவித்தார்.
                மேலும் குறிப்பாக நாளை நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைவரும் ஆதரவுதரவேண்டும் எனவும் ஆர்பாட்டப்பேரணிக்கு அணைவரையும் கலந்துகொள்ளவேண்டும் எனவும் தழிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் அழைப்பு விடுவதாகவும் தெரிவித்தார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7