இந்திய விமானப்படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்து இருந்தார்.
250 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமித்ஷா கூறும் போது பிரதமர் மோடி மௌனமாக இருப்பது ஏன் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ள மாயாவதி,
“இந்திய விமான படை பாகிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது குருவான பிரதமர் மோடி எப்போதும் மௌனமாக இருக்கிறார். தீவிரவாதிகள் கொல்லப்பட்டால் நல்ல செய்திதான். ஆனால் பிரதமர் மோடி மௌனமாக இருப்பதன் ரகசியம் என்ன?“ என குறிப்பிட்டுள்ளார்.
