அதன்படி அதிசொகுசு வாகனங்களுக்கான உற்பத்தி வரி திருத்தியமைக்கப்படவுள்ளதுடன், சிறிய கார்களுக்கான வரி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, 1300 சிசி திறன் கொண்ட வாகனங்களுக்கான உற்பத்தி வரியை 5 இலட்சம் ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 800 சிசி-க்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயினாலும், 1000 சிசி-க்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.
