கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க காலத்திலிருந்து அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
அது தற்போது வெற்றியளித்துள்ளது. கிராம மட்டத்திற்குச் சென்று மக்களிடம் கலந்துரையாடும்போது அவர்கள் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால், அரசியலில் விட்டுக்கொடுப்புக்கள், அர்ப்பணிப்புக்கள் இல்லாவிட்டால் இதனை எம்மால் ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது.
அத்தோடு, இலங்கை மக்கள் அரசியல் ரீதியான தரவுகளை சமூக வலைத்தளங்களின் ஊடாகவே தெரிந்துகொள்கிறார்கள்.
கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியைக்கூட, மக்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாகத்தான் தெரிந்துக்கொண்டுள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் வெளிவரும் பதிவுகளை பெரும்பான்மையோர் நம்புகிறார்கள். எனவே, இதனை சரியான முறையில் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுவே தற்போது இலங்கையின் சவாலாக உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.