முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாகாண மட்ட ஆண், பெண் தைக் வொண்டோ போட்டியில் ஆண்கள் பிரிவில், முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்று 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் பெற்றுக்கொண்டதுடன், மன்னார் மாவட்டம் 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் பெற்றுக்கொண்டது.
மூன்றாம் இடத்தினை கிளிநொச்சி மாவட்டம் பெற்று 2 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது.
பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை முல்லைத்தீவு மாவட்டம் தனதாக்கி 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் பெற்றுக்கொண்டதுடன் மன்னார் மாவட்டம் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் பெற்றுக் கொண்டது.
மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டம் 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது.