சி. மயூரன் எழுதிய மெய்வல்லுனர் போட்டி விதிமுறைகளின் சாராம்சமும் அலுவலர்களுக்கான வழிகாட்டலும் என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) மாலை 4.30 மணிக்கு திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் தி.பிரபாதரன் தலைமையில்திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்படுவதையும், விழாவின் பிரதம விருந்தினரான கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி மங்கல விளக்கேற்றுவதையும், நூலாசிரியர் தண்டாயுதபாணிக்கு நூலினை வழங்கி வெளியீட்டு வைப்பதையும், நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் படங்களில் காணலாம்.
(அ . அச்சுதன் )