நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மக்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் என அனைவரும் அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் வலிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர். எனவே அவர்களது கருத்துகளைக் கேட்காமல், கவலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் மாநிலத்தில் எந்த அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.
எனவே அடித்தளத்தில் இந்த மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை நாம் அனைவரும் இணைந்து கொண்டு வருவோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.