எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.
இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.
குறித்த விமானத்தில் பயணித்த 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, எட்மன்டன் பகுதியினைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Amina Ibrahim Odowaa என்ற தாயும் ஐந்து வயதான அவரது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Amina Ibrahim Odowaa இன் சகோதரர் Mohamed Hassan Ali அந்நாட்டு ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.