
பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கைக்கும் கத்திக்குத்து வன்முறை சம்பவங்களின் உயர்வுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என பிரதமர் தெரேசா மே நேற்றையதினம் கூறியிருந்த நிலையில் பொலிஸ் ஆணையாளர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஆரம்பித்து இரண்டு மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில் குறைந்தது 35 பேர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வன்முறை சம்பவங்கள் அதிகரித்த பிரச்சினையை சமாளிப்பதற்கு காவல்துறை தவறிவிட்டது என வெளிவந்துள்ள விமர்சனங்களுக்கும் மறுப்பு தெரிவித்த பொலிஸ் ஆணையாளர் தெருக்களில் அதிகரித்து வரும் வன்முறைக்கு போதைப்பொருள் பாவனை உயர்வே காரணமெனவும் தெரிவித்தார்
