ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் வேட்பாளர் தெரிவு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலின் இறுதியில் தேர்தல் கூட்டணி மற்றும் வேட்பாளர் தெரிவை இறுதி செய்வதற்கு கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு அதிகாரம் அளித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லாலு பிரசாத் யாதவ், தற்போது உடல்நல கோளாறு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.