இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில், ’90ml’ திரைப்படத்தின் இயக்குனர், நடிகை ஓவியா மற்றும் திரைப்படத்தில் நடித்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று முறைப்பாடு செய்துள்ளனர்.
பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், குழந்தைகளை சீரழிக்கும் வகையிலும் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாசார சீரழிவு நிறைந்து இருக்கின்றது என்று முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனிதா உதூப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள ’90ml’ திரைப்படம் உலகளாவிய ரீதியில் பல்வேறு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
