மட்டக்களப்பு மாவட்ட சமூக சிவில் பாதுகாப்பு பொலிஸ் குழு மற்றும்
கிராம மட்ட சமூக சிவில் பாதுகாப்பு பொலிஸ் ஆலோசனை ஒருங்கமைப்பு குழு
உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்
இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு , காத்தான்குடி ,
வவுணதீவு ஆயித்தியமலை ஆகிய நான்கு பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ்
உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எச் .டி .கே .எஸ் கபில ஜயசேகர தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் நடைபெற்றது
.
நடைபெற்ற சமூக சிவில் பாதுகாப்பு பொலிஸ் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில்
தமது கிராம புறங்களில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் அதனுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாகவும்
,கிராம மட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பொது பிரச்சினைகள்
தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .
இதன்போது சமூக சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக
மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது .
நடைபெற்ற சமூக சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மாவட்டத்தின்
மட்டக்களப்பு காத்தான்குடி , வவுணதீவு ஆயித்தியமலை ஆகிய நான்கு பொலிஸ் பிரிவு
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கிராம
சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் , மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர்
.