கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வென்றில் இன்று (திங்கட்கிழமை) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “மு.க.ஸ்டாலின் யாரை வேட்பாளராக அறிவிக்கின்றாரோ அவரை வெற்றிபெறச் செய்யவேண்டும். இளைஞர்களின் எழுச்சியை பார்க்கும்போது தி.மு.க.வின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
அந்தவகையில், மக்களின் எழுச்சியைப் பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சல் ஏற்படுகின்றது. இதன் காரணமாக தி.மு.க.வை குடும்பக் கட்சி என்று விமர்சனம் செய்கின்றார். கருணாநிதி பற்றியோ, உழைப்புக்காக கருணாநிதியால் பாராட்டுப்பெற்ற தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றியோ விமர்சிக்க அவருக்கு எந்தவொரு தகுதியும் கிடையாது.
மேலும், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரவுள்ளது. ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றார்கள். முதல்வர் நாற்காலியில் மு.க.ஸ்டாலின் அமருவார். எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்” என்று கூறினார்.
