புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பாக குறித்த நூதன போராட்டம் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை கிடைக்காதமையால் அவர்களது தகுதிக்கு ஏற்ற தொழிலை புரியாமல் துன்பப்படும் நிலைமையை எடுத்துக்காட்டும் வகையில் நடித்துக்காட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக கூறி கோஷங்களை எழுப்பி ஆளுநர் மாளிகையை நோக்கி புறப்பட்டு சென்று, முற்றுகையிட முயற்சித்தனர்.
ஆனால் பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார் அவர்களை தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதனால் ஆளுநருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிய அவர்கள், சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம், துணை தலைவர்களான விக்ரமாதித்தன், சண்முகபிரியன், தமிழழகன், பொதுச்செயலாளர் தரணி, நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.