பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மகளிர் தினமான இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட அவரின் சகோதரி அயலவர்களுக்கு அறிவித்ததை தொடர்ந்து, பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மாணவியின் இந்த நிலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. மாணவியின் கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவரது மரணம் தொடர்பாக பொலிஸார் சந்தேகம் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை பிரிவினர் மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் உயர் தரத்தில் கலை பிரிவில் கல்வி கற்றுவரும் 18 வயதுடைய ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.