சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் மற்றும் பூங்கொத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சிலர் கிட்டார் வாசித்து தமது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
நியூசிலாந்தின் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை அவுஸ்ரேலிய நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
“நியூசிலாந்து எப்போதும் சந்தித்திராத கொடுமையான பயங்கரவாதத் தாக்குதல் இதுவென” அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தாவினால் விழிக்கப்பட்ட இச்சம்பவம் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தில் மற்றுமன்றி உலகளாவிய மக்கள் வெவேறு பகுதிகளில் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.