லண்டனில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு மோசடியான முறையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி எனக் கூறி, கடைகளில் பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இவ்வாறானவர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.