அந்த கழகத்தின் தலைவரும், முன்னாள் வட. மாகாண சபையின் அமைச்சருமான அனந்தி சசிதரன் யாழில் இன்று (திங்கட்கிழமை) ஊடக சந்திப்பில் கலந்துகொண்டார்.
இதன்போது, திருக்கேதீஸ்வரத்தில் வீதி வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில், “எங்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியாது தடுப்பது மட்டுமல்லாது புதியதொரு பிரச்சினையை எமக்கிடையில் தோற்றுவித்துவிட்டு எமக்குள் இனப்பிரச்சினை இல்லை எனவும், வெறும் மதப் பிரச்சினையே உள்ளது என்றும் காட்டும் விதமாக இந்த செயற்பாடு காணப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் அந்தந்த மதத்தினர் அந்தந்த மதத்தை பின்பற்றும் உரிமை பூரணமாக வழங்கப்பட்டிருந்தது. அந்த நிலையிலேயே இன விடுதலைப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுவந்தது.
எங்கள் இனப் பிரச்சினையை பின்னோக்கித் தள்ளி மத ரீதியான பிரச்சினையை முன்னிலைப்படுத்துவது அரசாங்கத்தின் வழமையான செயற்பாடாகவே இருக்கிறது.
இதன் பின்னணியிலேயே இன்று பௌத்தத்தை முன்னுரிமைப்படுத்தி குறித்த மதம் சார்ந்து சிந்திப்பதற்கும் வழிவகுத்து இனப் பிரச்சினைக்குத் தீர்வை எட்டவிடாமல் புறந்தள்ளிக்கொண்டு போகும் நிலையுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
