சென்னை சாலிகிராமத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு இன்று மாலை வந்த துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தினார்.
இல்லத்துக்கு வந்த ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை சுதீஷ் வரவேற்றார்.
அ.தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணியில் இன்னும் இழுபறி நீடித்து வரும் நிலையிலும், நாளை தே.மு.தி.க. உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையிலும், விஜயகாந்த் – ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
